நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: நாகர்கோவில்-திண்டுக்கல்-கோவை வரை தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிழவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த அப்பாவு ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, புளியம்பட்டி கிளை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...