கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ.1,20,000 திருடிய ரேஷன் கடை ஊழியர் கைது

120 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல், காலதாமதம் செய்து வந்த ரேஷன் கடை ஊழியர் மதியரசுவை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியரசு ( வயது 35). இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1000 வழங்க ரூ.8,41,000 ஒப்படைக்கப்பட்டது.

இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து விட்டார். மீதமுள்ள 120 பேருக்கு பணம் வழங்கவில்லை. அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 17ஆம் தேதி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலதாமதம் செய்து வந்தார். அவரை பிடித்து பணத்தை பெற முயற்சி செய்தபோது தலைமறைவாகிவிட்டார்.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் ரேஷன் கடை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ் வழக்கு பதிவு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த மதியரசுவை நேற்று கைது செய்தார். பின் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...