திமுகவினரே அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலை அளிப்பதாக திருப்பூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேட்டி

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவுக்கு 10 லட்சம் பேர் கூடக்கூடிய வகையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக பிரதமரை வரவழைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 28ஆம் தேதி வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடத்துவது குறித்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றதாகவும், அதனை இருட்டடிப்பு செய்யும் வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்பட்டது கண்டனத்துக்குரியது எனவும் பேட்டி அளித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் முதல் எண் மக்கள் யாத்திரையை தொடங்கியுள்ளதாகவும் திருப்பூரில் 28ஆம் தேதி நடைபெறும் யாத்திரயில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திப்பார் எனவும் தெரிவித்தார்.

யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவு 10 லட்சம் பேர் கூடக்கூடிய வகையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக பிரதமரை வரவழைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் திமுகவினர் பொய்யின் பிறப்பிடமாக இருப்பதாகவும், இதற்காகத்தான் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து நல்லதொரு தீர்ப்பை நேற்று வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் என் மண் என் மக்கள் யாத்திரையில் வைக்கப்படும் புகார் பெட்டியில் பொதுமக்கள் மட்டுமல்லாது, திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட தங்கள் கட்சியினரின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு வழங்கி வருவதாகவும், திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளிக்கொண்டுவரும் வடிகாலாகவும் இது அமைவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...