தாராபுரத்தில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டு

மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாநிலம் அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தி.மு.க தெற்கு மாவட்டம் பொறியாளர் அணி சார்பில் நடந்த, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் பதக்கங்களை நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.

மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாநிலம் அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர் உள்பட

6-தலைப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற்றது.

பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் பரிசு தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



இதேபோல் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு தாலுகாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் காங்கேயம், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...