கோவையில் 12ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

மருத்துவம் பயிலாமலேயே பனிரெண்டாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த தேவராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் தேவராஜ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

மருத்துவம் பயிலாமலேயே பொதுமக்களுக்கு தேவராஜ் மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில், மக்கள் நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழு, போலி மருத்துவர் தேவராஜ் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கையும் களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து, போலி மருத்துவர் தேவராஜை, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...