பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் போதையில் தாறுமாறாக டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி சென்றவர்களை பார்த்து மக்கள் அச்சம்

போதையில் டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த கௌதம் மற்றும் அவரது நண்பர் இருவரையும் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, போதையில் இருந்த கௌதமிடம் அபராத தொகையை கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு போலீசாரின் கூறினர்.


கோவை: சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் திருச்சி சாலையில் சூலூர் நோக்கி ஒரு டாட்டா ஏஸ் வாகனம் சென்றது. அந்த வாகனம் சாலையில் தாறுமாறாக சென்றதால் அவ்வழியே சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கி வழி விட்டனர்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிய வரை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சூலூர் ரோந்து காவல் வாகன போலீசார் டாட்டா ஏஸ் ஒட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரித்தனர். அவர் கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த கௌதம்(27) என்பது தெரியவந்தது.

அந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் கௌதம் மற்றும் அவரது நண்பர் என இருவர் வந்துள்ளனர். நிற்கவே முடியாத நிலையில் மது போதையில் இருந்த கௌதம் மற்றும் அவரது நண்பரை போலீசார் விசாரித்தனர். மேலும் மது அருந்தியதை உறுதிப்படுத்த போலீசார் கௌதமை பிரித் அனலைசர் கருவியில் ஊதச் கூறினர். அதற்கு போலீசாரிடம் கிண்டலாக ஊது ஊது என்கிறீர்களே இது என்ன மகுடியா ஊதுவதற்கு என கௌதம் கிண்டல் அடித்தார்.

மேலும் கௌதமை போட்டோ எடுக்க போலீசார் முயன்ற போது என்னோட போட்டோவை கூகுளில் தேடிப் பாருங்கள் வரும் என நக்கலாக பேசினார். இதற்கிடையே போலீசார் கௌதமை ரோந்து வாகனத்தில் ஏற்றி சூலூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்து கௌதம் மது அருந்தி இருப்பது உறுதி செய்து அவர் மீது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

அபராத தொகையை கட்டி வாகனத்தை விடுவித்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுரை கூறி கௌதமை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கௌதமின் நண்பர் எதுவுமே தெரியாதபோல் சாலையின் ஓரத்தில் படுத்து போதையில் உறங்கினார். சமீப காலமாக திருச்சி சாலையில் போதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டுள்ளது.

போலீசாரும் போதை வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று அபராத தொகையை உயர்த்தியும் கூட, போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகரித்த வண்ணம் உள்ளனர். சாலையில் செல்வோர் இதனால் கலக்கத்துடன் நாம் இன்று வீடு போய் சேருவோமா இல்லையா என்கிற பயத்திலேயே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...