பொள்ளாச்சியில் திமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய பாஜகவைச் சேர்ந்த 9 பேருக்கு சிறை -பாஜகவினர் சாலை மறியல்

பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் உடுமலை தேசிய நெடுஞ்சாலை தேர் நிலையம் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: அயோத்தி ராமருக்கு மாட்டு கறி பிரியாணி ரெடி என திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது மகன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் உள்ளிட்ட இருவரும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். இதனைக் கண்டித்து பாஜகவினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது திமுக மற்றும் பாஜகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் காயம் அடைந்த திமுக நிர்வாகி மணிமாறன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் பாஜக நகர தலைவர் பரமகுரு உள்ளிட்ட 11பேரை கைது செய்து அவர்கள் மீது தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தல், அத்துமீறி நுழைதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது பா.ஜ.க பெண் நிர்வாகி மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த நிர்வாகி என இரண்டு பேரை நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். மற்ற 9 பேர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் உடுமலை தேசிய நெடுஞ்சாலை தேர் நிலையம் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீ ராமர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்ட திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், மேலும் பாஜகவினரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...