சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவிரவாதி என அச்சிட்டு போஸ்டர்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ள பகுதிகளில், அவர் புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணியின் இல்லம் உள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் மூன்று இடங்களில் எஸ்.பி. வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்துள்ளது.

அதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அதனை பார்த்த அதிமுகவினர், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒன்று திரண்டு சுவரொட்டி ஒட்டிய நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...