பேரூர்பட்டி விநாயகர் கும்பாபிஷேக பெருவிழா- சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் பங்கேற்று தரிசனம்

இன்று (ஜனவரி.24) காலை, 9:55 மணி முதல் 10:55 மணி வரை பட்டி விநாயகருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான, பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 22ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது.

நேற்று, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, கடங்கள் புறப்பாடு நடந்தது. அதன்பின், இன்று (ஜனவரி.24) காலை, 9:55 மணி முதல் 10:55 மணி வரை பட்டி விநாயகருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...