உடுமலை நகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறுஞ்சேரி, சின்ன வீரன்பட்டி, கண்ணமநாயக்கனூர், ராகல் பாவி, கணபதிபாளையம் பூலாங்கிணறு போன்ற ஒன்பது ஊராட்சிகளை உடுமலை நகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம்

முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உடுமலை நகராட்சியுடன் கணக்கம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, குறுஞ்சேரி, சின்ன வீரன்பட்டி, கண்ணமநாயக்கனூர், ராகல் பாவி, கணபதிபாளையம் பூலாங்கிணறு போன்ற ஒன்பது ஊராட்சிகளை உடுமலை நகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இந்த ஆணையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக அதிகம் உள்ள கிராமங்களில் அனைவரும் 100நாள் வேலையை நம்பி இருக்கும் நிலையில், நகராட்சியுடன் இருப்பதால் வேலை கிடைக்காமல் போய்விடும். எனவே தமிழக அரசு உடனடியாக மக்கள் நலன் கருதி உடுமலை நகராட்சி உடன் ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் சார்ந்த வரிகள் போன்றவை உயர்த்தப்படும் காலியிடங்களுக்கான வரி விதிக்கப்படும், வீட்டு மனைகளின் விலை அதிகமாகும், நகராட்சியுடன் ஊராட்சி நினைத்தால் கிராம மக்களில் வாழ்வாதாரம் பாதிக்கும் ஊராட்சி பகுதிகளுக்கு மெட்டல் சாலை சிமெண்ட் போன்ற பணிகளுக்கு நிதி வராது, விவசாயிகளுக்கு தென்னை மரம் வரப்பு வைத்தல், செக் டேம் கட்டுவது, குளம் குட்டை தூர்வாருவது போன்ற மேற்கொண்ட பணிகளுக்கும் எந்த ஒரு நிதியும் வராது. அனைத்து வரிகளும் கிராம மக்கள் தலையில் வந்து சேரும் என தெரிவித்தனர்.

எனவே அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்யப்படவில்லை

என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, விடுதலை சிறுத்தைகள், இந்து சாம்ராஜ்யம், உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...