கொள்ளுபாளையம் கிராமத்தில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம்

முகாமில், 30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சையில் பங்கேற்று பயனடைந்தனர். பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் அருகே கொள்ளுபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கால்நடை மலடு நீக்க மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர் குமாரவேல் தலைமை தாங்கினார். முகாமில் ஈனியல் துறை தலைவர் செந்தில்குமார், இணை பேராசிரியர் வீணா, உதவி பேராசிரியர் மருத்துவர் கல்யாண், அறுவை சிகிச்சை துறை தலைவர் முனைவர் சிவசங்கர், கால்நடை உணவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலமுருகன் மற்றும் விரிவாக்கத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் குறித்து விளக்கம் அளித்தனர்.

30க்கும் மேற்பட்ட கறவை மாடு வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு கறவை பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. பின்னர் விவசாயிகளுக்கு தானுவாசு தாது உப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை குறித்து விளக்க கையேடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...