ஆலந்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 7 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை ஆலந்துறை போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் பணத்தை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது அதிமுக மாவட்ட கவுன்சிலர் பிரதீப் என்பது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை ஆலந்துறை அடுத்த உரிப்பள்ளம் புதூரில் கௌதம் என்பவரின் தோட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக ஆலந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீசார் மற்றும் ஆலந்துறை போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது அங்கு சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை ஆலந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் பணத்தை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பதும், இவர் அதிமுக மாவட்ட கவுன்சிலர் என்பதும், மற்ற நபர்கள் கனகராஜ் (40), செல்வம் (55), கந்தசாமி (52), மாரியப்பன் (56), ராஜசேகரன் (45) கௌதம்(38) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...