சாமளாபுரத்தில் தனியார் பள்ளியில் நிர்வாக பிரச்சனை – கல்வி பாதிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் சாலை மறியல்

சில நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகத்தை மாற்றினால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகும். எனவே பள்ளி நிர்வாகத்தை மாற்ற வேண்டாம் என்று கூறி பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் அருகே தனியார் (லிட்ரசி) பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அறங்காவலர் குழு செயலாளரான ராமமூர்த்தி என்பவர் பள்ளி நிர்வாகத்தை நடத்தி வருகின்றார். அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் மற்றும் சில உறுப்பினர்களை சில மாதங்களுக்கு முன்பு குழுவில் இருந்து நீக்கியுள்ளனர்.

நீக்கப்பட்டவர்கள் இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த செந்தில்குமார் தரப்பினர் நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வந்து விட்டதாகவும், இனிமேல் பள்ளி நிர்வாகத்தை தாங்கள் நடத்த போவதாகவும்,பள்ளியை விட்டு ராமமூர்த்தியை வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மங்கலம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் தரப்பினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் பிரச்சினையால் மாணவர்கள் கல்வி பாதிப்பதாக கூறி பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பள்ளி தாளாளர் ராமமூர்த்தி வெளியேற வேண்டாம் என கூறி மாணவர்களும் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் சில நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகத்தை மாற்றினால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகும். எனவே பள்ளி நிர்வாகத்தை மாற்ற வேண்டாம் என்று கூறி பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார், மங்கலம் போலீசார், மாவட்ட கல்வி அலுவலர் பெற் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தேர்வு நெருங்கி வரும் சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம் மாறினால் ஆசிரியர்கள் மாற்றப்படுவார்கள். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகும் என பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...