அடிப்படை வசதிகள் கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினர் பொதுமக்களுடன் ஆர்ப்பாட்டம்

14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர், கரூர் மெயின்ரோடு, செட்டியார் தோட்டம், குலுக்குபாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் 18-வார்டுகள் உள்ளன. தி.மு.க கூட்டணி வார்டு உறுப்பினர்கள் 16-பேர், அ.தி.மு.கவில் ஒருவர் பாஜகவில். ஒருவர் உள்ளனர். திமுகவை சேர்ந்த சுதா பேரூராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் 14-வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர், கரூர் மெயின்ரோடு, செட்டியார் தோட்டம், குலுக்குபாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தார் சாலை, தெருவிளக்கு, கழிவறை வசதி, குப்பை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் திருமலை குமார் மற்றும் தலைவர் சுதா ஆகியோர் செய்து தரவில்லை என கோரி பாஜகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தாராபுரம் கரூர் மெயின் சாலையில் உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 14-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தலைவர் மற்றும் செயலாளரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்திருந்தோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் பொது மக்களுக்கு செய்து தரவில்லை. இதனால் 400-குடும்பங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவை சேர்ந்த உறுப்பினர் என்பதால் தன்னுடைய கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றுவதில்லை. இதனாள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது பேரூராட்சி செயலாளரிடம் மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயலாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக 14-ஆவது வார்டு பாஜக உறுப்பினர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...