கோவை மாநகராட்சி ஊழியர்கள் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை மாநகராட்சி ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநகராட்சி உதவி ஆணையர் நூர் அகமது, உதவி ஆணையர் மாணிக்கம் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட பழைய தபால்நிலைய சாலையில் பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோடிக் என்ற நவீன இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை தூய்மைப் பணிகள் இன்று நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், இன்று நேரில் ஆய்வு செய்தார்.



பின்னர் பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...