கோவை மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தில், சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு காட்சியளித்தனர்.


கோவை: கோவையில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 24) திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.



அதன்படி சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர். பின்னர் விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு சுப்ரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு மங்களநாணை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். திருமண கோணத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் வழிபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...