திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டணம் தெரிவிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. இவரை நேற்று 24-01-2023 புதன்கிழமை இரவு, செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டணம் தெரிவிவித்துள்ளது.

மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமூக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...