தைப்பூச திருவிழாவைமுன்னிட்டு மருதமலை முருகன் கோவிலில் தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தைப்பூச திருநாளை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று கோவை மாவட்டத்தின் முக்கிய திருக்கோயிலான முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.



அதன் பின்னர், விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை தம்பதி சமேதமாக திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தைப்பூசத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை வலம் வந்த சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.



தைப்பூச திருநாளை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...