வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளில் வள்ளிக் கும்மி நிகழ்ச்சி

தொடர்ந்து 50 ஆண்டுகள் தைப்பூசத் திருவிழாவை நடத்தி வரும் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் வடமதுரை விருதுஸ்வரர் கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான P.V மணிக்கு இறை பணியை பாராட்டி பரிவட்டம் கட்டி பாராட்டு விழா மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொன்விழா ஆண்டான இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் வடமதுரை விருதுஸ்வரர் கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான P.V மணி தலைமையில் நடைபெற்று வருகிறது.



இரண்டாம் நாளில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக விருந்தீஸ்வரர் திருக்கோவிலை வந்து ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடினர்.



தொடர்ந்து பரத நாட்டியத்துடன் தொடங்கிய வள்ளிக் கும்மி நிகழ்ச்சியில் 120 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் ஒரே மாதிரியான உடையணிந்து வள்ளி கும்மி நடனமாடி அசத்தினர்.



முன்னதாக வள்ளி கும்மி நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக வந்திருந்த திமுக மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தைப்பூசத் திருவிழாவை நடத்தி வரும் திருச்செந்தூர் திருமுருகன் இறை வழிபாடு மன்றம் வடமதுரை விருதுஸ்வரர் கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான P.V மணிக்கு இறை பணியை பாராட்டி பரிவட்டம் கட்டி பாராட்டு விழா மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் வள்ளி கும்மி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், துடியலூர் டியூகாஸ் முன்னாள் துணைத் தலைவர் ஆர் செல்வராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சுரேஷ் குமார், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத் தலைவர் P.D மோகன்ராஜ் வட்டார நிர்வாகிகள் ஆர்டிஓ பழனிசாமி சூர்யா, வெள்ளிங்கிரி, தம்பி பார்த்திபன், எல்.எம் டபிள்யூ அசோகன், கூடலூர் பழனிசாமி, வெங்கடசாமி, எக்ஸ் கவுன்சிலர், கூடலூர் இன்ஜினியர், விக்னேஸ்வரன், வசந்தகுமார், அருணா நகர் சண்முகசுந்தரம், வேல்முருகன், சேகர், சுந்தரம், ஊர் கவுண்டர் செல்வராஜ், ரவிச்சந்திரன், வேலுசாமி, ஊர் கவுண்டர் வடமதுரை ஜமாப் ரவி, குணசேகரன், இளைஞரணி பிரபு, கே.கே டிராவல்ஸ் ஜெயக்குமார், அன்பு, குமார்கன்னிமடை பாலசுப்பிரமணியம், காளவாய் ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...