மாணவிகளுக்கு தொழிற்சார்ந்த ஆற்றல் தன்மையை மேம்படுத்த “புத்ரி” திட்டத்தை அறிமுகம் செய்த மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், கோவை மாநகராட்சியும் மற்றும் அறம் பவுண்டேஷன் சாரிட்டபுள் டிரஸ்டும் இணைந்து அவதார் தொண்டு நிறுவனத்தின் மூலம் 20 மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள 8-ம் வகுப்பு 12 வகுப்பில் பயிலும் 2000 மாணவிகளுக்கு தொழிற்சார்ந்த ஆற்றல் தன்மையை மேம்படுத்தி பயிற்சி அளிக்கும் விதமாக “புத்ரி” எனும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.



கோவை மாநகராட்சியும், அறம் பவுன்டேஷன் சாரிடபிள் டிரஸ்ட்டும் இணைந்து, வருகின்ற கல்வியாண்டில் சென்னையை சார்ந்த அவதார் தொண்டு நிறவனத்தின் தொழில் சார்ந்த நோக்குத்தன்மையை மேம்படுத்தும் “புத்ரி” என்கிற திட்டத்தை 8 முதல் 12-ம் வகுப்பில் படிக்கும் 2000 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளர்கள்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் இது தொடர்பாக பயிற்சியாளர்கள் மூலம் 30 மணிநேரம் பயிற்சி நடத்தப்படும். இதில் ஒவ்வொரு மாணவியின் தகுதியையும், ஆற்றலையும், திறமையையும் மனதில் கொண்டு அவரவர் ஆர்வம் மற்றும் விருப்பதிற்கேற்ப கல்வி பயிற்சி, தொழில் பயிற்சி, வழிகாட்டுதல், விழிப்புணர்வு என 5 ஆண்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படும்.

மேலும், மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் முன்மாதிரிகள், தொழில் கூடங்களுக்கு நேரில் சென்று அங்கு நடைபெறும் தொழில் சார்ந்த பயிற்சியும் கற்றுத்தரப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெறும் மாணவிகள் அனைவரும் தொழிற்சார்ந்த நோக்குத் தன்மை மேம்படுத்தக்கூடும்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி கல்வி அலுவலர் உமா, அறம் பவுன்டேஷன் நிர்வாகிகள் லதா சுந்தரம், மாதவன், அவதார் ஹுயூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் திட்ட இயக்குநர் ஈஸ்வர் பாலசுப்ரமணியன், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...