தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உடுமலையில் நாடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாகனங்கள் தொடக்கம்

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்களிப்பது முக்கியத்துவம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு வாகனம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி என இரண்டு வாகனங்களை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் துவக்கி வைத்தார்.

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும். வாக்களிப்பது குறித்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வாகனத்தில் இருக்கும் வருவாய் துறையினர் விளக்கம் அளிப்பார்கள் என உடுமலை வருகை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம் துவக்க நிகழ்வில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...