தேசிய வாக்காளர் தினம் - கோவையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: தேசிய வாக்காளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது அவசியம், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது குறித்து எல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைக்கு தொடக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.



அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியானது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், அண்ணா சிலை வ உ சி மைதானம் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.



இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திய படி செல்லும் வழியில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...