தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் சித்தர் சமாதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 8 பேர் காயம்

இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது. இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க ட்ராவலர் டிரைவர் பிரேக் அடிக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கம்பட்டியில் சித்தர் சமாதி உள்ளது. இங்கு அவரது பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் குமாரபாளையம் தேவூர் கிராமத்திலிருந்து 19 பேர் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக நேற்று இரவு கணக்கம்பட்டிக்கு வந்தனர்.

அங்கு சித்தர் சமாதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று பழனி_தாராபுரம் சாலையில் 407-ட்ராவலர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம்_பழனி சாலையில் உள்ள ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது அப்போது இனோவா கார் ஒன்று பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி அதி வேகமாக வந்து ட்ராவலர் வாகனத்தை ஓவர் டேக் எடுத்து சென்றது.



இதனால் திடீரென வேனில் முன் பகுதியில் வந்த இனோவா காரின் மேல் மோதல் இருக்க 407 ட்ராவலர் டிரைவர் சரவணன் (33) பிரேக் அடிக்க கட்டுப்பாட்டை இழந்த ட்ராவலர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.



இதில் பயணித்த 19 பேரில் அஜித்குமார், மங்கமாள், செல்வராஜ், குப்பாய், அன்புராஜ், உட்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...