உடுமலை அமராவதி அணையில் இருந்து இன்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக்கட்டுப் பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக வந்து அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாகவே முழு கொள்ளவாக உள்ளது.

இந்த நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக 2229 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், புதிய ஆயக் கட்டுப்பாசனத்திற்கு 64.45 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மொத்தம் 3293.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 15-ம் தேதி முடிய 50 நாட்கள் தகுந்த இடைவெளி விட்டு 28 நாட்களுக்கு தண்ணீர் வழங்கபடும். இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...