பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் லோகாம்பாள், சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதாக கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...