75வது குடியரசு தினம் - தேசிய கொடியை பறக்கவிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் மரியாதை

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, குழந்தைகளுடன் இணைந்து மூவர்ண பலூன்களை அவர் பறக்கவிட்டார்.


கோவை: நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.



அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 208 அரசுத் துறை பணியாளர்கள், மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களும் காவல்துறை மரியாதையை ஏற்று கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...