மாநில செம்மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்-பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் புகார்

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட திமுக மற்றும் மாணவரணி சார்பில் பொள்ளாச்சி பிளாக் மாரியம்மன் கோவில் ஜீவா திடலில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளர் மருத்துவர் மகேந்திரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.



கூட்டத்துக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு மாநில மொழிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் செம்மொழிகளாக கருதப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கி உள்ளது.

இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசக் கூடியவர்கள் 24ஆயிரத்து 891 பேர் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 649 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் 30 கோடி பேர் பேசக்கூடிய தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் 29 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களை முடக்குவதற்கும், மாநில மொழிகளை முடக்கும் செயல் என வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...