அசோகபுரம் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

11வது வார்டு ரங்கம்மாள் காலனி விநாயகர் கோவில் முன்புறம் சுமார் 9 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து 11வது வார்டு ரங்கம்மாள் காலனி விநாயகர் கோவில் முன்புறம் சுமார் 9 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 4வது வார்டு ஸ்டேட் பேங்க் காலனி 2 வீலர் ஒர்க் ஷாப் முதல் நாயர் ஸ்கூல் வழியாக ராக்கிபாளையம் மெயின் ரோடு தார்சாலை அமைப்பதற்கான பணிகளையும் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதற்கு பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், ஒன்றிய முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் ஜெயபிரியா சக்கையன், பிரேமா, சங்கீதா, ஸ்ரீராம், சுதாகர், பார்த்திபன், ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். மேலும் ஸ்டேட் பேங்க் காலனி விநாயகர் கோவிலில் நடைபெற்ற தைப்பூச பூஜையில் கலந்துக்கொண்டு அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...