கோயம்புத்தூர் மாநகராட்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் மரியாதை

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 73 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு நற்சான்றிதழ்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று 26.01.2024 காலை 8.05 மணிக்கு குடியரசு தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன் பின்னர், விக்டோரியா ஹால் வளாகத்தில் உள்ள இந்திய தேசியக் கொடியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்கள். மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, க.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.



கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 9 பேருக்கு வெகுமதியாக தலா ரூ.2000/- மற்றும் நற்சான்றிதழ்களையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியில் சிறந்த முறையில் பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 35 பேருக்கும், சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து வாங்கியமைக்காக தூய்மைப்பணியாளர்கள் 25 பேருக்கும், வெள்ளலூர் உரக்கிடங்கில் சிறந்த முறையில் பராமரித்து பணிபுரிந்தமைக்காக 4 பேருக்கும், என ஆகமொத்தம் 73 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.



பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் அறிவியல் கண்காட்சியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரத்தினபுரி, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் இளஞ்செல்வி கார்த்திக் மண்டல குழுத்தலைவர் (கிழக்கு), இலக்குமி நிலைக்குழுத்தலைவர்கள் பெ.மாரிச்செல்வன் (பொது சுகாதாரம்), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...