கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும் என்று கற்பகம் கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் ரவி பேசினார்.


கோவை: கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர். இராச. வசந்தகுமார் அவர்கள் விழாவில் தேசியக்கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.



பதிவாளர் முனைவர் சு.இரவி அவர்கள், குடியரசுதின விழா பேருரை ஆற்றினார். '



பழமையான குடியரசு நாடாகிய இந்தியாவின் தனித் தன்மையைக் காப்பதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. நாளும் பல புதிய செயற்கைக்கோள்களை ஏவுதல் முதலான பல தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. அத்தகைய உயர்வை என்றும் நிலைநிறுத்த இளைஞர்களின் சமுதாயப் பொறுப்புணர்வும், பொதுநல உழைப்பும் தேவை.

அனைத்து துறைகளிலும் நாட்டை வலிமையாக்க, இளைஞர் நலன் நாளும் மேம்பட வேண்டும். இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும்' என்றார்.

தேசிய மாணவர்ப்படை வீரர்களும், கேப்டன் சிறீதரன் ‌அவர்களும் விழாவில் பாராட்டுப் பெற்றனர். விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் க. முருகையா, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு, முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...