உடுமலை அமராவதி நகர் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

குடியரசு தின விழாவில் இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியின் முதல்வர் கே.தீபு நினைவு கூர்ந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுக்காப்புதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராணுவ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற மாணவர்களின் மிடுக்கான கண்கவர் அணிவகுப்பு ஏற்று கொண்ட பின் பள்ளி முதல்வர் (பொறுப்பு)லெப்டினன்ட் கே.தீபு தேசிய கொடி ஏற்றினர்.

பின்னர் முதல்வர் பேசும் பொழுது, இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை நினைவில் கூர்ந்தார். 75 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அறிவியல் விவசாய மருத்துவ மற்றும் சுகாதாரமாக துறைகளில் தேசத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.



நம் நாட்டின் 75 ஆம் ஆண்டு கால வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கி செல்வதற்கான இலக்கை உணர்ந்து கொண்டு செயல்பட அறிவுறுத்தினார். பின்னர் முதல்வர் அமர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியாக பள்ளி பேண்ட் அணியின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...