வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று குடியரசு தின விழா உரையில், வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் கு.பிரபாகர் கேட்டு கொண்டார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை வட்டம் வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது. விழாவில் கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

அவர் தனது குடியரசு தின விழா உரையில், வேளாண்மை பயிலும் மாணவர்கள் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டு, புது வகை வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட கேட்டு கொண்டார்.



தேசிய மாணவர் படையின் ராணுவம் சார்ந்த நிகழ்ச்சி, மாணவர்களின் பிரமிட் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட அளவில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கல்லூரி முதல்வர் முனைவர் கு.பிரபாகர் மற்றும் இயக்குனர் முனைவர் கெம்புசெட்டி கவரவித்தனர். இந்த நிகழ்ச்சிகளை மாணவ மன்ற அலுவலர் ரவிக்குமார் ஒருங்கிணைப்பில் மாணவ மன்ற பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...