குறுஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் மக்கள் மறியல்

பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி கிராமத்தை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரப்பில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட்டால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சித் துறை அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அத்துடன் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...