தாராபுரம் நகராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் மதிப்பில் 9 புதிய வண்டி

குப்பைகளை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி மேலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். பொறியாளர் செண்பக வடிவம் முன்னிலை வைத்தார். அனைத்து நகர மன்ற கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சுகாதார பிரிவு முன்கள பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு சான்றிதழ்களை நகர மன்ற தலைவர் வழங்கினார். தொடர்ந்து குப்பை குளங்களை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க 18 லட்சம் செலவில் நகராட்சியால் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...