பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம்

தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவின் 30வது நாளான இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேமுதிக நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

விஜயகாந்த் மறைந்து 30 வது நாள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொள்ளாச்சி கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் LJJ ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளி மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி மற்றும் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் வால்பாறை கிட்டு, மாவட்ட துணை செயலாளர் கோட்டூர் ரவிச்சந்திரன், பொள்ளாச்சி மேற்கு நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட தேமுதிக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...