பணி நிரந்தரம் கேட்டு வரும் 31ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம்- பொள்ளாச்சியில் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இறந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ஆம் முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகம் முழுவதும் 35 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

திமுக ஆட்சியில் மூன்று முறையும், அதிமுக ஆட்சியில் மூன்று முறையில் மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். தற்போது 13 ஆயிரத்து 500 பேர் வேலை இழந்து உள்ளார்கள். கடந்த தேர்தலில் மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.



சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இறந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 31ஆம் முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

எங்களது போராட்டங்கள் நிறைவேற்றும் வரை பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...