பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி - மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.


கோவை: ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வட்டாரப் போக்குவரத்து துறை, காவல் துறை சார்பில் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி, பாலக்காடு சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.



சாலை பாதுகாப்பு குறித்த அம்சங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு தேசியப்படை மாணவர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி பாலக்காடு சாலை, மத்திய பேருந்து நிலையம், கோவை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது.



அப்போது விபத்து இல்லா தமிழகத்தை உருவாக்க வாகன ஓட்டிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...