மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு துணிப்பைகள் பயன்படுத்த அறிவுரை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மத்திய மண்டலம், காந்திபுரம், 100 அடி ரோடு மற்றும் மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் ரோடு, அண்ணா மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் சில்லரை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளில் 50 மைக்ரான் குறைவாக உள்ள சுமார் 460 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது. 



மேலும், கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு இன்று மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினர்.

கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் முறையின்றி கண்ட இடங்களில் எறிவதாலும் அவை மக்கும் தன்மை இல்லாததாலும் அவற்றால் சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. 

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 21ம் தேதியன்று உதவி நகர்நல அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றம் ஆய்வாளர்களுடன் ராஜ வீதி மற்றும் தாமஸ் வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் சுமார் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 5 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மாச் 24ம் தேதியன்று உதவி நகர்நல அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் மத்திய மண்டலம், காந்திபுரம், 100 அடி ரோடு மற்றும் மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் ரோடு, அண்ணா மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் சுமார் 460 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினர்.

மேலும், வரும் மே 1ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடைசெய்யப்படவுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

ஆகவே, தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...