தாராபுரம் அருகே உப்பாறு அணையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண் சாமியாடியதால் பரபரப்பு

நான்காம் நாள் கட்ட போராட்டமாக உப்பாறு அணை உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 400க்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் இருந்து சாரை சாரையாக சென்று அணை நீரில் இறங்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என கோசம் எழுப்பினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தில் உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் நிர்வாக உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து நான்கு நாட்களாகியும் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது.



இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் உப்பாறு அணை உட்பகுதியில் இறங்கி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வகையில் நான்காம் நாள் கட்ட போராட்டத்தில் உப்பாறு அணை உள்ள சேற்று தண்ணீரில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அணை நீரில் இறங்க வேண்டாம் என வலியுறுத்தி இருந்தபோதிலும் 400க்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் இருந்து சாரை சாரையாக நடந்து வந்து அணை நீரில் இறங்கி அணைக்கு தண்ணீர் வேண்டும் என கோசம் எழுப்பினர்.



அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சாரதி என்ற பெண்மணிக்கு சாமி வந்து ஆடினார். அணைக்கு தண்ணீர் தராத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாமி ஆடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...