தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 44,480 ஏக்கர் பயன்பெறும் வகையில் இரண்டாம் சுற்று தண்ணீர் திறந்து விட கோரி ஆழியார் திட்ட குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரியிடம் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர்.



இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு முற்றுகைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சார் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...