உடுமலையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் பேரணி

குட்டை திடலில் துவங்கி பேரணி, தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணி குட்டை திடலில் துவங்கி தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



பேரணியில் உடுமலை டி.ஸ்.பி.சுகுமாரன், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி,

இரு சக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் ஹெல்மெட் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கங் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...