தாராபுரத்தில் காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் அண்ணா சிலை முன்பு காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை திமுகவினர் நடத்தினர்.



உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மதங்களை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு முன்னதாக காந்தியடிகளுக்கு மூன்று நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் காங்கிரஸ், திராவிட கழகத்தினர், திமுகவினர், மனிதநேய மக்கள் கட்சி, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...