வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை

பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அதிகமானோர் வந்து செல்கின்றனர்.



இப்பகுதியில் பூங்காவில் மண் சுவர் அவ்வபோது இடிந்து சாலையில் விழுந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பூங்காவிற்கு 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் இன்று நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம், மற்றும் துணை நகர மன்ற தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் முன்னிலையில் பூமி பூஜை செய்து பணி துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...