ராமன் மற்றும் அனுமன் பற்றி சமூக வலைதளத்தில் கோவையை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் சர்ச்சை பதிவு

தமிழகத்தில் ராமனுக்கும் அனுமனுக்குமான மரியாதை என்பது ராமன் மற்றும் அனுமான் பிச்சை எடுப்பது போன்றது என்பதை குறிக்கும் புகைப்படத்தை சாந்தகுமார் என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றார்.


கோவை: கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் சமூக வலைதளத்தை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதில் இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சாந்தகுமார் என்பவர் பதிவிட்ட பதிவை பார்த்திருக்கின்றார்.



கலவரங்களின் மூலம் பிணங்களை குறித்து அதன் மேல் கட்டப்படும் ஆலயம், ராமன் இருந்தால் இந்த ஆலயத்தில் வசிக்க மாட்டான் என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.



அதேபோன்று தமிழகத்தில் ராமனுக்கும் அனுமனுக்குமான மரியாதை என ராமன் மற்றும் அனுமான் பிச்சை எடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கின்றார்.



இருப்பதை இழந்த கடவுளாலும் எதையும் புடுங்க இயலவில்லை மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கேடுகெட்ட கொடூர ஆட்சியை தக்க வைக்க முயல்கிறார்கள் மதவெறி ஆட்சியாளர்கள்" என சாந்தகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

ஐ.பி.சி. 295A - எந்த ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளையும், அதன் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் செய்த குற்றன் என்பதனை அடிப்படையாக வைத்த பிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...