மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளை திமுகவினர் மத நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



இதனையடுத்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...