பூமி தாயை பாதுகாப்பது ரொம்ப ரொம்ப முக்கியம் - கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவ சூரியன் வலியுறுத்தல்

கடவுள் நம்பிக்கை உள்ளவரான தொண்டாமுத்தூரை சேர்ந்த சிவ சூரியன் என்பவர் அயோத்தி கோயில் முன் நின்று கடவுள்களுக்கும் தாய் நம்ம பூமி தாய் என்றும், பூமியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலரான சைக்கிள்ஸ்டூ சிவ சூரியன். இவர் பூமியில் நிலவும் கால நிலைகளை பொதுமக்கள், பள்ளி கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

இவர் பெரும்பாலும் அனைத்து இடங்களுக்கும், அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளிலேயே பயணம் செய்பவர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 10 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிலில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். இவர் தற்போது அயோத்தி ராமர் கோயில் சென்றிருக்கின்றார்.

அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உள்ளவரான சிவ சூரியன், கோயில் முன் நின்று கடவுள்களுக்கும் தாய் நம்ம பூமி தாய் என்றும், பூமியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

அவர் ராமர் கோயில் முன் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோவில், நானும் என் குடும்பத்தாரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எல்லா கடவுள்களுக்கு தாய் கடவுள் இருக்கின்றன. ராமர், கிருஷ்ணர், ஜீசஸ், அல்லா என எல்லா கடவுள்களுக்கும் தாய், இந்த பூமி தாய். அதனை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன். கால நிலை மாற்றத்தை ஒவ்வொரு மீட்டிங் டேபிள் மட்டுமன்றி டைனிங் டேபிளிலும் விவாதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். அதன் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வில் ஈடுபட்டுகின்றேன்.

இந்த நிலையில் எனக்குள் ஒன்று தொன்றியது. இங்கு கஷ்டப்பட்டு நாம் கோயில் கட்டியிருக்கின்றோம். அவ்வொரு மதத்தினரும் மஸ்ஜித், தேவாலயம் கோயில் கட்டலாம். அடிப்படையில் நம் அடுத்த தலைமுறையும் கோயிலில் தரிசிக்க வேண்டும். அதற்கு இந்த உலகை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அதற்கு நாம் என்ன பங்களிப்பை தருகிறோம் என்பது முக்கியம்.

அதே சமயம் அரசாங்கம் நினைத்தால், கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து அனைவருக்கும் கொண்டுசெல்ல முடியும். இதனை செய்ய வேண்டும். மரம் வளர்ப்பதனால் என்ன பயன் என்று கேட்கின்றனர். மரம் வளர்ப்பதன் பயனை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் மரம் வளர்க்கின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல், சிறந்த மாணவராக அங்கிகரித்து விருது தர வேண்டும். இதனை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும். நாம் வணக்குவதற்கு ஆயிரம் கடவுள்கள் இருக்கின்றன. ஆனால் வாழ ஒரு பூமி மட்டுமே இருப்பதனால், வாழும் பூமியை நாம் பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...