மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை – கோவை ஆட்சியர் உறுதி

கரப்பாடி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவையில் கடந்த மாதம் மக்களுடன் முதல்வர் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி பிரிவு பகுதியில் தனியார் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இதில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த பேட்டியின் போது, கடந்த மாதம் முதல்வரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 19, ஆயிரம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இதில் 50 சதவீத மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த மாவட்ட ஆட்சித் தலைவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற பொதுவான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...