6 வது கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டி- கோவை கற்பகம் பல்கலை. வீரர் தங்க பதக்கம் வென்று அசத்தல்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா வாலிபால் விளையாட்டு போட்டியில்,கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக், தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.


கோவை: 6வது கேலோ இந்தியா இளைஞர் தேசிய விளையாட்டு போட்டி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய இளைஞர் விளையாட்டு துறை சார்பாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள வாலிபால் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைப்பெற்று வந்தது. இதில் கோவை கற்பகம் பல்கலை மாணவர் ஏ.அதுல் நாயக் பிபிஏ முதலாம் ஆண்டு தமிழ்நாடு வாலிபால் அணிக்கு தேர்வாகி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றார்.

அரையிறுதி போட்டியில் ஆந்திர அணியை போராடி வென்றது. இறுதி போட்டியில் பலம் வாய்த ஹரியானா அணியை 3-1 செட் கணகில் வென்று முதல் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவருக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் மற்றும் பயிற்சியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...