மணியகாரம்பாளையம் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த மேயர்

மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை இன்று (ஜன.31) தொடங்கி வைத்தார். அவருடன் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை இன்று (ஜன.31) தொடங்கி வைத்தார்.



உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ப.ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், அவைத்தலைவர் அருணாசலம், துணை செயலாளர்கள் சுசீலா, குருசாமி, பிரதிநிதிகள் மனோஜ், கதிர், கழக நிர்வாகிகள் ரகு, பிரதீப், கனகராஜ், மோகன், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...