பொள்ளாச்சியில் மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க பாடுபவோம் என்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மாநில தலைவர் ரமேஷ் ஐயா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் புரிபவர்களின் உரிமையை மீட்டெடுக்கவும் அரசிடமிருந்து சலுகைகள் பெற்றுத் தரவும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், தமிழகத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி உள் இட ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும், மருத்துவ சமூக மக்களைப் பிற சமூக மக்கள் வன்கொடுமை தாக்குதல், கொலை செய்தல் மற்றும் பெண்களை இழிவு படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...